Tuesday, 26 May 2015

கூலிக்கு மாரடிப்பான்.

எங்கிருந்தோவருவான்.

எங்கு இருந்தோ வந்திடுவான்.
இங்கு தமிழ் நானென்பான்.
சொங்கு மொழி ஏதோபேசி
பங்கம்செய் பாவம் செய்வான்.

அப்பாவி  நானென்பான்--சாமி 
சப்பரம் சாவியெடுப்பான்.
கூலிக்கு மாரடிப்பான்--நீதி
வேலிக்கு சீரழிப்பான்.

எங்கிருந்தோ அலறுவான்.--பட்டு
ஏதேதோ உளறுவான்.
சங்கறுந்த கோழி போல்--தலை
தொங்கி ஊளை கூவுவான்.

வேலையற்ற கோழையவன்--விடி
காலையற்ற தேரையவன்.
நெஞ்சமற்ற வஞ்சனவன்.--நேர்
கொஞ்சமற்ற கஞ்சனவன்.

ஆடும் வரை ஆடுவான்.--அவனே
அகம் ஒடுங்கி வாடுவான்.
கூடும் அவன் பாவங்களே--சிவனே
குழி அடங்கி மூடுவான்..

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment