Monday, 9 March 2015

மாதவம்.

மாதவம் செய்வமோ!

மாதராய்ப் பிறப்பதற்கோ
மாதவம் செய்திட வேண்டுமென
ஏங்கிய கவிஞரும் ஏற்பரோ!
மாதராய்ப் பிறக்கவும் தேர்வரோ-- இன்று..
மகளீர் படுந் துயர் பொ றுப்பரோ!
மனிதம் காப்பதும் அவசரம்.

மகளீர் தின நாளின்றோ!
மகளீர்க்கு மகிழ்ச்சியோ!
மகளீரும் மனிதரன்றறிவரோ!
மதிக்கத் தெரியா நாய்களை-தீர்க்க
மலர் சூடும் பெண்டீரினி
மடிக் கத்தி சூடுவதும் அவசரம்.

ஆசைப் பொருள்களோ மாதர்!
அலையும் வேசைப் பயல்களே!
மானுடமே தலை குனிகிறது.
மனம் நொந்து துடிக்கிறது--காம
வெறி நாய்களை வேட்டையாட
வேலு நாச்சிகள் எழுவதும் அவசரம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment