Monday, 19 January 2015

அன்னை மொழி.

புதிய உலகம்.!

முன்னை மொழியே தமிழே வாராய்
அன்னை வடிவே அமுதே வாராய்.
பின்னை உலகின் வழியே வாராய்
வின்னை அலகின் ஒளியே வாராய்.

எதிர்ப்போர் செருக்கை ஒடுக்கி வாராய்.
மதிப்போர் சிறப்பை மிடுக்கி வாராய்.
அதிரும் எட்டுத் திக்கும் வாராய்.
நதிகள் இட்டுத் தெற்கே வாராய். ,

இளைஞர் நிறைந்தோம் தலையே வாராய்.
அலையென விரைவோம் விளைவே வாராய்.
ஊழல் களையும் ஊழியம் வாராய்.
வேளை இதுவென விதியே வாராய்.

ஆணை செய்யவே அவசரம் வாராய்.
ஆவன எய்யவே அவசியம் வாராய்.
சேனை இளைஞரை செலுத்திட வாராய்.
தேவை எழுச்சியை உணர்த்திட வாராய்.

காலம் மாற்றும் காட்சியே வாராய்..
கோலம் ஏற்றும் ஆட்சியே வாராய்..
வாலைக் குமரர் தேற்சியே வாராய்..
நாளைச் சுமையின் ஏற்பே வாராய்.

சிந்தனை வளமே செழிக்க வாராய்.
தந்தனை நலமே தழைக்க வாராய்..
உந்தனை உயிரே உணர்வே வாராய்.
வந்தனை புதிய உலகே வாராய்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment